செவ்வாய், 23 நவம்பர், 2010

Mechanical Engineersum பொண்ணுங்களும்:

பதிவ படிக்கிறதுக்கு முன்னாடி ஒரு  முக்கியமான  விஷயம்  இந்த  bloga பொண்ணுங்க  யாரும்  படிக்காதிங்க (அப்டின்னு  சொன்ன 
கண்டிப்பா  ஒரு  பொண்ணும்  கேக்காது) அப்புறம்  எந்த  இழப்புக்கும்  company பொறுப்பு  ஏற்காது.
 


இந்த  தலைப்ப  பாத்ததுமே  நீங்க  எல்லாரும்  யோசிச்சிருபீங்க, யோசிக்கலனாலும்  பரவால்லீங்க
நானே  சொலிடறேன் இது  மெக்கனிக்கல்  engineersukkum பொண்ணுங்களுக்கும்  உள்ள  relation ship பத்தி  தாங்க,
பொதுவா  மத்த department பசங்களுக்கும்  மெக்கனிக்கல்  engineersukkum நெறைய  difference
இருக்குங்க  இந்த  மெக்கனிக்கல்  engineer படிக்க  வர்றவைங்க  எல்லோரும்  எப்போவுமே  பொதுவா  boys school la
தான்  படிச்சிட்டு  வந்துருப்பாங்க  அப்படியே  co-ed ல படிச்சாலும்  பொண்ணுங்கள  பாத்தா  TR படம்  ஓடுற
theatra பாத்து பொது  மக்கள்  ஓடுற  மாதிரி  பொண்ணுங்க  இருக்கிற  directionu-க்கு opposite directionla
போயிட்டு  இருப்பாங்க (ஒரு சில நாதாரிகள  தவிர அவங்கள நாங்க எங்க லிஸ்ட்ல  சேத்துக்க‌ரதே இல்லீங்க)
இவனுங்க  மெக்கனிக்கல்  engineer department செலக்ட்  பண்றதுக்கு  இதுவும்  ஒரு  முக்கியமான  காரணம்,
நீங்க  மெக்கனிக்கல்  engineering first year classla போய் பாத்திங்கன்னா  உங்களுக்கே  தெரியும், class பூராவும் ஒரே 
அரண்மனைக்கிளி ராஜ்கிரணும், எங்க  ஊரு பாட்டு காரன்  ராமரஜனுமா  தான் இருப்பாங்க, ஒரு  சில பேர் (என்ன
போல) hrithik roshan மாதிரி  இருந்தாலும்  மனச  தொறந்து  பாத்தா  அங்கயும்  ஒரு  ராஜ்கிரண்  தான் உள்ள உக்காந்து  நல்லி 
எலும்பு  கடிச்சிக்கிட்டு  இருப்பாரு.

பய  புள்ளைங்க  வெளில  தான்  இப்படி  ராஜ்கிரண்  மாதிரி  கிரிப்பா  maintain பண்ணிக்கிட்டு  இருப்பாங்க  உள்ளுக்குள்ள
பாத்தீங்க  amul icecreama விட  வேகமா  உருகிடுவாங்க  இப்படி  எல்லாம்  பொண்ணுங்க  சகவாசமே
இல்லாத  நம்ம  பயலுகளுக்கு  ஒரு  பொண்ண  மட்டும்  புடிச்சி  love (love வரதுக்கு  முன்னாடி  ishvarya
raye வந்து  மணி  கேட்டாலும்  எனக்கு  மணி  பாக்க  தெரியாதுன்னு  உண்மைய  சொல்லிடுவாங்க)
வந்துடுச்சின்னு  வைங்க  அந்த  பிகர்  அண்டர்டிகால   போய்  டென்ட்  அடிச்சி  அதுக்குள்ள  வாழ்ந்தாலும்  பக்கத்துலே  போய்
இன்னொரு  குட்டி  டென்ட்  அடிச்சி  கொடுத்தாவது  correct பண்ணி  புடுவாங்க , already அமெரிக்கா வரைக்கும்  போய்
பிகர்  correct பண்ணுன  அனுபவம்  இருக்கு (உபயம்:  வாரணம்  ஆயிரம்).

ஆனா  இந்த  பொண்ணுங்களோட  கெட்ட நேரம்  எப்பவுமே  ஒரு  மொக்கையான  CS, IT இல்ல  EC பையனோட தான்
அதிகமா  சுத்துவாங்க  அவனுங்க  போடுற  மொக்க  இருக்குதே  தாங்க  முடியாதுங்க  அவனுங்க
பேசுற  விஷயத்த  எல்லாம்  எங்க  பாட்டிகிட்ட போய்  சொன்னா  கூட  மொக்க  போடதடான்னு  சொல்லிட்டு  அந்த
பக்கம்  திரும்பி  வழக்கம்  போல  சீரியல்  பாத்து  மூக்க சிந்த  ஆரம்பிச்சிரும், எனக்கு  ஒரு சந்தேகம்
இந்த  பொண்ணுங்க  எல்லார்கிட்டயும்   கேக்கணும்  உண்மையிலே  உங்களுக்கு  அவங்கள  புடிச்சிருக்கா, இல்ல  வேற  வழி
இல்லாம  அவங்களோட  கடலை  போடுரிங்கலான்னு.

அதே  நேரம்  இந்த  பொண்ணுங்களையும்  சும்மா  சொல்லிட கூடாது  அதுங்க  கடலை  போடுற  மொக்க  பசங்க 
ரேஞ்சுக்கு  இவங்களும்  மொக்கைல  சலச்சவங்க  இல்ல.ஒரு  நாள்  நான்  நடந்து  போகும்  போது
ஒரு  கடலை  ஜோடி  பக்கதுல  வந்துச்சு  அப்போ  அந்த  பிகர்  அதோட  boy friend கிட்ட  கேக்குது  "இன்னைக்கு
என்கிட்டே  ஒரு  முக்கியமான  change ஒன்னு  இருக்குது  அது  என்னனு  கண்டுபுடி" அப்டின்னுச்சு நான் 
என்னனமோ  யோசிச்சிகிட்டு இருக்கேங்க  அந்த  பயபுள்ள என்னோட  பெரிய  மாங்கவா  இருப்பான்  போல  நான்  யோசிக்கிற
அளவு  கூட யோசிக்க  மாட்டங்கிறான்  கடைசில  என்ன  மாற்றம்னு  அது  சொல்லுச்சு  பாருங்க  என்னனு கேக்குறிங்களா  ஹேர்  பின்னுங்க  அந்த  பதில கேடட வுடனே  எனக்கு  இதே மாதிரி  ஒரு  மொக்க  பிகரோட தான் நம்ம  காலத்த கடத்தனும்னு  பயத்துல  காய்ச்சலே  வந்துடுச்சின்னா பாத்துகங்க.பொண்ணுங்க  என்ன தான்  jeansum, salvaarum போட்டுக்கிட்டு pizzavum, burgarum தின்னாலும் (oc ல  தான்) அவங்க
மனதளவுல  இன்னும்  அன்பே  வா  சரோஜா  தேவியோட  வாரிசா  தாங்க  இருக்குறாங்க.
என்ன  தான்  CS, IT, EC பயங்க  அழகா, நல்ல  படிச்சி, நிறைய  சம்பளம்  வாங்கற  வேலைல  இருந்தாலும்
love ல  போட்டின்னு  வந்துடிச்சின்னு  வைங்க  நம்ம  பயலுகள ஜெயிக்க முடியாது, இத  நீங்க  மின்னலே
படத்துல  பாத்துருபீங்க, அதுல  என்ன  தான்  அப்பாஸ்  மைதா மாவுக்கு  தங்கச்சி  கலர்ல  இருந்தாலும்
கடைசில  நம்ம  பங்காளி  மாதவன்  தான்  ரீமாவ  correct பண்ணுவார்.

இந்த  பதிவ  படிக்கிற  பொண்ணுங்க எல்லாருக்கும்  ஒன்னு  சொல்லிக்க  விரும்பறேன் (எப்படியும்  என்  பேச்சை  கேட்காம
எல்லா  பொண்ணுங்களும்  இந்த  bloga படிக்க  தான்  போவுது) வாழ்க்கைய ரசிச்சு  சந்தோசமா  வாழனும்னா  ஒரு
மெக்கனிக்கல்  engineera பாத்து  கல்யாணம்  பண்ணிக்கங்க (பங்களிகளா  உங்களுக்காக எப்படியெல்லாம்
மார்க்கெட்டிங்  பண்றேன்  பாத்திங்களா) என்ன  தான்  நாங்க  spanera புடிச்சு  வேலை  செஞ்சிகிட்டு  ராஜ்கிரண்  மாதிரி
இருந்தாலும்  எங்க  மனசுக்குள்ள ஒரு  மின்னேலே  மாதவனும், hrithik ரோஷனும் எங்கயாவது  ரூம்  போட்டு  உக்காந்து
இருப்பாங்க (love வந்ததுக்கு  அப்புறம்  அதுக்கு  முன்னாடி  ராஜ்கிரண்  தான்), அதே  நேரம்  பங்களிகளா
நம்மளும்  நம்ம  கிரிப்ப  விட்டு  எறங்கி  வரணும் . நம்ம  மட்டும்  ஒழுங்கா  இருந்தா சில  மொக்க
பசங்கலாம்  நாலஞ்சு  பிகர  correct பண்ணிக்கிட்டு , நம்மள  ஆஞ்சேநேயர் மாதிரி  பாப்பாங்களா? கவலை
படாதிங்க  எப்படியும்  இந்த  பதிவ  படிக்கிற  ஒவ்வொரு  பிகரும்  மெக்கனிக்கல்  engineera தான்  தேடும்
நமக்கு  பிரகாசமான  எதிர்காலம் இருக்கு  நம்மள  தவிர  அத்தனை பயலையும்
ஆஞ்சேநேயர்  ஆக்கிடலாம் .(எல்லாம்  நல்ல  படியா முடிஞ்சதும்  அப்படியே  அண்ணனுக்கு  மெரினாவுல  ஒரு  சிலை  வைக்க
மறந்துடாதிங்க  அப்புறம்  நன்றி  கெட்டவைங்கன்னு நம்மள  தான்  உலகம்  தப்பா பேசும்).

நன்றி அறிவிப்பு:

இந்த  பெயர்  காரணம்  போடுறதுக்கு  முன்னாடி  முக்கியமான  ஒரு  மேட்டர்

நான்  blog ஆரம்பிக்க  காரணமா இருந்த  அண்ணன்க வெளியூர்காரன், சிவகாசிகாரன், சாளரம், தராசு, வசந்தகாலபறவை, ரெட்டைவால்ஸ்  எல்லாருக்கும்  முதல்ல  நன்றி, அப்புறம்  நன்றி  கெட்டவன் சதிஷ்னு யாரும்  சொல்லிட  கூடதுல்ல, இத  தான் நான்  முதல்ல  போட்ருக்கணும் 
ஒரு  ஆர்வத்துல  பெயர்  காரணம்  போட்டுட்டேன்.
நான்  எழுதுற  பதிவுகல்ல நானே  நெனச்சாலும்  இவங்க  பாதிப்பு  இல்லாம  பதிவு  எழுத  முடியாது  கவலை  படாதிங்க  அதுக்காக  காப்பி  எல்லாம்  அடிக்க  மாட்டேன்.

திங்கள், 22 நவம்பர், 2010

பெயர் காரணம்

அது ஒன்னும் இல்லீங்க நம்ம பூர்வீக கிராமத்தோட பேர் அது, அதான் இந்த பேர்லே இருக்கட்டுமே அப்படின்னு வச்சுட்டேன், அது மட்டும் இல்லீங்க, என்னோட சின்ன வயசுல எங்க தாத்தா எங்க அப்பாகிட்ட அடிக்கடி சொல்வாரு வாடா தம்பி நம்ம ஊருக்கே போய்டலாம், என்ன தான் இங்க நம்ம நல்லா வாழ்ந்தாலும் நம்மள பொழைக்க வந்தவன்னு சொல்லுவாங்கன்னு,  ஆனா எங்க எங்க அப்பா  அத கடைசி வரை கேக்கவே இல்லங்க, ஒரு stagela  எங்க தாத்தா கோவத்துல மொவனே நீ எந்த உரு போனாலும் உன்னைய கொடுக்கூரானு தான் கூப்டுவாங்க அப்டின்னு சொல்லிட்டாரு, எங்க அப்பா அத கண்டுக்கவே இல்ல ஆனா அது தாங்க நடந்துது, எங்க கிராமத்துல எங்க அப்பா பேர்(கொடுக்கூரார்) தாங்க, அதனால நம்ம சொந்த ஊரு மேல ஒரு பாசம.
இது தாங்க பெயர் காரணம்.